TO CONTINUE IN ENGLISH CLICK HERE

  CLICK HERE FOR REGISTRATION DETAILS

 CLICK HERE TO DOWNLOAD PDF IN TAMIL

 CLICK HERE TO DOWNLOAD PDF IN ENGLISH




காலபைரவ  கர்மா

இறப்பு வரும்போது  அதை நாங்கள் எப்படிக் கையாள்வது என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.ஏனெனில் அதை பற்றிய தெளிவு அவர்களிடம் இல்லை.
                 
ஒருவர் இறந்து விட்டால்    உயிர்சக்தி முழுவதும்  உடனே  உடலை விட்டு பிரிந்துவிடுவதில்லை . இறந்த உடலில் 11  லிருந்து 14 நாட்கள் வரை, சிலநேரங்களில் 40 நாட்கள் வரையும் கூட முடியும்  நகங்களும் தொடர்ந்து வளரும் .
                                                                       தனது தாடியை நன்றாக மழித்துக் கொண்டிருந்த ஒருவர் இன்று இறப்பதாக வைத்துக் கொள்வோம் .எதோ காரணங்களால் புதைக்காமல்,எரிக்காமல் ,பிண அறையில் வைத்திருந்தால் 3 நாள் கழித்து இலேசாக தாடி எட்டிப் பார்க்கும்.முடியும் நகமும் தொடர்ந்து சில நாட்கள் வளர்கின்றது .ஒரு சிறிய அளவில் இன்னுமும் உயிர்சக்தி செயல்பட்டுக் கொண்டிருப்பதையே இது குறிக்கிறது. ஏனென்றால் உடலை விட்டு உயிர் பிரிவது மெதுவாக நடக்கிறது .
                                                           நம் உடலில் 5 விதமான வாயுக்கள் உள்ளன. அவை பிராணவாயு , சமான வாயு , அபான  வாயு, உதான வாயு மற்றும் வியான வாயு. இதில் பிராண மற்றும் சமான வாயுக்கள் முதலில் உடலை விட்டு பிரிகின்றன . இந்த 2 வாயுக்களும் பிரிந்த உடனேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்படுகிறார் . ஆனால் உடல் மட்டும் இன்னும் வளையும் தன்மையுடன் இருக்கும் . இன்னும் சில மணி நேரங்களில் அபானா மற்றும்  உதானா வாயுக்கள் உடலை  விட்டு பிரிகின்றன . இப்போது உடலின் வளையும் தன்மை நீங்கி கட்டை போல் ஆகின்றது .ஆனால் உடலை பாதுகாக்கும் தன்மை கொண்ட வியான வாயு பிரிய சில நாட்கள் எடுத்துக்கொள்ளும். வியான வாயுதான் இறுதியாகப் பிரிவது . இது முழுவதுமாகப் பிரிவதற்கு பொதுவாக 11 ல் இருந்து 14 நாட்கள் வரை  எடுத்துக் கொள்கிறது அதனால் தான் இறப்பு சடங்குகள் அந்த நாட்கள் வரை நீட்டிக்கபடுகின்றன . ஒருவித புரிதலிலிருந்துதான் இது போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன . ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போது இந்த சடங்குகள் சரியான புரிதல் இல்லாதவர்களால், சரியான அனுபவம் இல்லாதவர்களால்  செய்யப்படுவதால் இந்த சடங்குகள் அதன் தன்மையை இழந்து வருகின்றன.   
                                      ஒரு யோகி தனது 5 வாயுக்கள் மீதும் ஒரு கட்டுப்பாடு வைத்திருந்தால் இறக்கும்போது வாயுக்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எடுத்துக்கொண்டு முழுமையாக உடலை விட்டு விலகுகிறார் . இறந்த உடலுடன் சில நாட்கள் ஓட்டிக் கொண்டிருக்க விரும்புவதில்லை. இப்படிச்
செய்வதற்கு   தனது   சக்தியின்  மீது   அவருக்கு ஒருவித திறமை  தேவைப்படுகிறது.

                                                                           ஒரு உதாரணம் சொல்கிறேன். .நீங்கள்  குடியிருக்கும்  வீட்டின்  சொந்தக்காரர் உங்களை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்கிறார். நீங்களோ இன்று உங்கள் மரச்சாமன்களை  எடுத்துக்கொண்டு  வெளியேறுகிறீர்கள்  .இன்னும்  இரண்டு   நாட்கள் கழித்து  சமையல் சாமான்களை எடுத்துக்கொண்டு வெளியேறுகிறீர்கள் .இன்னும் 4  நாட்கள் கழித்து   வந்து  உங்கள் படுக்கைகளை  எடுத்து  சுருட்டிக்கொண்டு  செல்கிறீர்கள் . ஏனெனில் உங்களுக்கு  வீட்டை விட்டு  போக விருப்பமில்லை . எனவே  சுற்றிச்  சுற்றி  வந்து  கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் இப்படி வீ ட்டை  விட்டு  வெளியேறத் தயங்குவதைப் பார்த்தால், பிறகு வீ ட்டு சொந்தக்காரரே  அனைத்தையும்   எடுத்து ஒன்றாக   வெளியே வீசிவிடுவார் . அதைத்தான் சரியாக உங்களுக்கும் செய்ய  வேண்டியிருக்கிறது . அதனால்தான்  இந்த சடங்குகள் .  ஆனால் இவை சரியான முறையில் செய்யப்பட வேண்டும் . பெரும்பாலான நேரங்களில்  இந்த சடங்குகள் சரியான புரிதலுடன் செய்யப் படுவதில்லை.
                                                    எனவே  நீங்கள்  வாழ்ந்த   வீட்டை விட்டு  முழுமையாக வெளியற உங்களுக்குத் தெரியவில்லை என்றால் வெளியேற  விருப்பமின்றி  தவணை முறையில்  உங்கள் உயிர் உடலை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தால் , வேறு யாரோ ஒருவர்  உங்களுக்காக செயல்பட்டு உயிரை வெளியேற்ற  முடியும்.
                                     எனவே இந்த சடங்குகளை மக்களுக்காக முறைப்படி செய்ய நாம் முயற்சி எடுத்து வருகிறோம் . இவை வெறும் சடுங்குகளாக  இல்லாமல் 
வியாபார நோக்கமாக இல்லாமல் அந்த உயிருக்கு உண்மையாக எதைச் செய்ய வேண்டுமோ  அதைச் செய்வதாக இருக்கும்.  இந்த சடங்குகளில் ஒரு பிரச்சனை  என்னவென்றால்  சமுகத்தில் நேர்மை குறையும்போது  சடங்குகள்  எளிதில் ஊழலாக  மாறிவிடும் . இந்த சடங்குகள் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் , ஒரு மனிதர்  அடுத்த மனிதரின் உயிருக்கு எந்த தீங்கும் விளைவிக்க மாட்டார் .என்ற உத்திரவாதம் இருந்தது . ஆனால்  தற்போது சமூகத்தில் நாணயம் குறைந்து வருவதால்,  இது போன்ற சடங்குகள்  தவறாக பயன்படுத்தப்பட  கூடிய  வாய்ப்புகள்  இருப்பதால் , இந்த சடங்குகளை  பற்றிய  அச்சமும்  சந்தேகமும்  மக்களுக்கு  இருக்கிறது.
                              நாம் துவக்கவுள்ள  இந்த சேவை தற்போது மக்களுக்கு மிகவும் தேவைப்
படுவதாக  இருக்கிறது . சேவை  என்றால் ஏதோ சில சடங்குகள்  செய்து  இங்கு வாழ்ந்து  கொண்டிருப்பவர்களைத்  திருப்தி ப்படுத்துவதல்ல. அது இறந்தவர்களுக்கான  சேவையாக இருக்க வேண்டும் .  வாழ்ந்து  கொண்டுஇருப்பவர்களைத் திருப்திபடுத்தும் சேவையாக இருக்கக்கூடாது.ஆரம்பத்தில்  சில பிரம்மச்சாரிகளையும்  சந்நியாசிகளையும் இதற்காக தயார் செய்ய இருக்கிறோம். பிறகு  மெதுவாக  மற்றவர்களுக்கும் கற்றுக்  கொடுக்கலாம்.
                                       வாழும்பொது தேவையான விழிப்புணர்வும் பயிற்சிகளும் இருந்திருந்தால்,பிறகு  இறக்கும் போது அவர்களுக்கு  எந்த சடங்குகளும்  தேவையில்லை. அவர்களே தங்களைப் பார்த்துக்கொள்வார்கள்.ஆனால்  அந்த பயிற்சியும்,  விழிப்புணர்வும் இல்லாதபோது இத்தகைய சேவை மக்களுக்குத்  தேவைப்படுகிறது.இந்த  சேவையை, செயல்முறையை,நாம் காலபைரவ  கர்மா என்கிறோம்.
                          இது இறந்தவர்களுக்கான  ஒரு செயல் முறை .அவர்கள் இனி செல்லும் புதிய இடம் ஒரு சிறந்த இடமாக இருப்பதை உறுதி செய்வதற்காக  இது தொடங்கபட்டிருக்கிறது.யாராவது ஒருவர் இறந்தால், நீங்கள் அவர் இறந்துவிட்டார் என்று நினைக்கிறீர்கள், ஆனால் அவர் இழந்தது அவரது உடலையும் , வாழ்க்கை என்று அவர் உணர்ந்திருந்த சிலவற்றையும் மட்டுமே.எப்போது அவர் தன்  உடலை இழந்தாரோ , அப்போதே தன் நிர்ணயிக்கிற  மனதையும்  அவர் இழந்துவிடுகிறார் . நிர்ணயிக்கிற  மனம் என்றால்  என்ன ? உங்களுக்குத் தெரிந்த யாரோ ஒருவர் இறந்து விட்டார்  என்று வைத்துக்கொள்வோம் .  இதனால் நீங்கள் சோகமும் துன்பமும் அடைகிறீர்கள் .அனால் சிறிது நேரத்திற்கு பிறகு "இப்படியே இருந்து கொண்டிருப்பதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை , என்ன செய்யத்தேவையிருக்கிறதோ அதை செய்யலாம் " என்று நீங்கள் உங்களுடைய  நிர்ணயிக்கிற  மனதை உபயோகிப்பீர்கள்.
                            அனால் இறந்தவருக்கோ  தற்போது நிர்ணயிக்கும்   மனது  இல்லை . எனவே அதே நிலையிலேயே தொடர்ந்து இருப்பார்.ஏனெனில் அவருக்கு தன் மனத்தின் மீது இப்பொது கட்டுப்பாடு  இல்லை . எனவே  இறக்கும் போது  அவருக்கு எந்த விதமான  உந்துதல்கள் இருந்ததோ அவை இப்போது  எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பல மடங்காகும்.அவருடைய  உந்துதல் இனிமையான உணர்வுடன் இருந்தால் அந்த இனிமை உணர்வு பல மடங்காகும்,உந்துதல் சோகமான உணர்வுடன் இருந்தால் , சோகமான உணர்வு பல மடங்காகும்.
ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும்  இது  தெரிந்திருந்தது  எனவேதான் , ஒரு மனிதர்  இறக்கும்போது  அவரைச் சுற்றி  ஒரு இனிமையான  சூழ்நிலை  இருக்கும்படி பார்த்துக் கொள்ளபட்டது .
                                                              எனவே அந்த கடைசி நேரத்தில், அல்லது அதற்கடுத்த சில குறிப்பிட்ட காலத்திற்குள், நாம் இன்னமும் அந்த உயிரை அணுகி அவருக்குள் இனிமை புகுமாறு பார்த்துக்  கொள்ள முடியும்.ஒரு சொட்டு இனிமையை அவருக்குள் புகுத்திவிட்டால் கூட, அந்த இனிமை இப்போது அவருக்குள் லட்சம் மடங்காக பெருகும்.  நிர்ணயிக்கும் தன்மையை அந்த உயிர் இப்போது இழந்துவிட்டதால் அந்த இனிமை பெருகுவதை அவரால் நிறுத்த முடியாது. எனவே அந்த உயிருக்குள் இனிமை ஊட்டுவதை நாம் இப்போது ஒரு செயல்முறையாக செய்ய இருக்கிறோம் அதைதான் நாம் காலபைரவ கர்மா  என்கிறோம்.
                        
'காலபைரவ சாந்தி' என்னும் செயல் முறையையும் தொடங்கி இருக்கிறோம். அதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.


 இது யோகக்  கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்து வந்திருக்கிறது.தன் இறப்பை சரியாக நிகழ்த்திக் கொள்ளத் தெரியாத ஒருவருக்காக, வேறு யாரோ ஒருவர் அதை நிகழ்த்தி வைக்கிறார். ஆனால் கடந்த 100 ,150 வருடங்களாக இந்த பாரம்பரியம் தேங்கிவிட்டது. இப்போது செய்யப்படுபவை வியாபார நோக்கத்திற்காகவும், ஊழல் மிகுந்ததாகவும்  இருக்கிறது. சடங்குகள் செய்பவர்கள் இறந்தவருக்காக செருப்பை வாங்கி வரச்சொல்வார்கள் ,குடை வாங்கி வரச்சொல்வார்கள். அல்லது பசுவோ குதிரையோ வாங்கி வரச் சொல்வார்கள். இறந்தவர்க்கு செருப்போ, குடையோ தேவையில்லை. இந்த சடங்கை  நிகழ்த்துபவருக்குத்தான்   அவை தேவை. அவர் நேர்மையாக ' எனக்கு செருப்பு வேண்டும்' என்று கேட்டு வாங்கலாம். 

எனவே இறந்தவருக்கான அந்த செயல்முறைக்காக லிங்க பைரவி திருக்கோவிலை சக்தித் தளமாக பயன்படுத்த உள்ளோம்.

                                        மக்கள் பேரானந்தத்துடன் வாழ நாம் ஆசைப்படுகிறோம்.அப்படி அவர்களால் முடியாவிட்டால், குறைந்தபட்சம் அமைதியாகவாவது அவர்கள் இறக்க வேண்டும். அதுவும் அவர்களால் முடியாவிட்டால், பிறகு அவர் இறந்தவுடனாவது எதாவது செய்ய நாம் விரும்புகிறோம். நீங்கள் இறந்து விட்டாலும் கூட, உங்களை ஆன்மீகமாக மாற்றும் என் முயற்சி, என் முயற்சி என்றும் விடாது ! .

குறிப்பு : தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவில்லை என்றால் எங்களுக்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போது தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய முடியும்.

  

காலபைரவ கர்மா
காலபைரவ கர்மா, ஒருவர் இறந்த குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட வேண்டிய செயல்முறையாகும். 

தேவையானவை : இறந்தவரின் புகைப்படம், உடை (உள்ளாடை மற்றும் சேலை தவிர) இந்த செயல்முறைக்கு தேவை. இறந்தபோது அணிந்திருந்த உடை வேண்டாம். இரத்த சம்பந்தமான உறவினர் ஒருவர் இந்த செயல்முறையின் போது அருகில் இருக்க வேண்டும். இந்த செயல்முறைகள் லிங்கபைரவி திருக்கோவிலில் நடைபெறும். பிறகு உறவினர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். (தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர்கள் இந்த செயல்முறைக்கு வர இயலவில்லை என்றால் மையத்திற்கு முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் தேவையான மாற்று ஏற்பாடுகள் செய்ய இயலும்)
நிபந்தனைகள் : இயற்கை மரணமாக இருந்தால் 50 வயதுக்கு மேல் - 14 நாட்களுக்குள்; 50 வயதுக்கு கீழ் 48 நாட்களுக்குள் 
இயற்கை மரணமாக இல்லாமல் விபத்து தற்கொலை போன்று இறந்திருந்தால் 33 வயதுக்கு மேல் - 48 நாட்களுக்குள்:     33 வயதுக்கு கீழ் - 90 நாட்களுக்குள் 

காலபைரவ சாந்தி  
காலபைரவ சாந்தி ஒவ்வொரு அமாவாசை அன்றும் நள்ளிரவில் நடைபெறும். 

தேவையானவை : இறந்தவரின் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி, அனுப்புநரின் முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவை  இந்த செயல்முறைக்கு தேவை. நன்கொடையை லிங்கபைரவி கோவில் அலுவலகத்தில் நேரடியாக அல்லது "Shri Yogini Trust " என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகவோ செலுத்தலாம். காலபைரவ சாந்தியை வருடத்திற்கு ஒருமுறை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது. 10 வருடங்களுக்கு சேர்ந்து முன்பதிவு செய்து கொள்ளலாம். வருட சாந்தி மகாளய அமாவாசையன்று செய்யப்படும். 

பதிவு மற்றும் தொடர்புக்கு : 
ஸ்ரீ யோகினி டிரஸ்ட் 
லிங்கபைரவி திருக்கோயில், செம்மேடு அஞ்சல், பூண்டி,
கோயம்புத்தூர். 641 114. 
போன் : +91 94864 94865, +91 94433 65631. 
Email : kbprocess@lingabhairavi.org










No comments:

Post a Comment